தைராயிடு நோய் கழுத்தில் ஏற்படுகின்றது. மருத்துவ உலகம் உடல் பருமன் தைராயிடு நோய்க்குக் காரணம் எனக் கூறுகின்றது. இதற்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றது.
ஆனால், உண்மையில் சமைத்துண்ணும் பழக்கத்தால் தான் உடற்பருமன் ஏற்படுகின்றது. அது மட்டுமல்லாமல் அனைத்து நோய்களும் ஏற்படுகின்றது. நரை, திரை, மூப்பு, சாக்காடு என எல்லா பிரச்னைகளும் அதனால் ஏற்படுகின்றது.
எந்நோய்க்கும் அறுவை சிகிச்சை அவசியமே இல்லை எனக் கூறுகின்றது இயற்கை உலகம். மேலும் மனிதருடைய அனைத்துநோய்களையும் ஒரே நேரத்தில் குணப்படுத்துவதும் இயற்கைதான். எந்த மருத்துவமும் எந்த நோயையும் குணப்படுத்தியதாகத் தெரியவில்லை. மாறாக, ஒரு நோய்க்கு மருந்து சாப்பிட்டுவிட்டுப் பல நோய்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறோம்.
தைராயிடுக்கு மட்டுமல்ல, புற்றுநோய், இதயநோய், சிறுநீரக நோய், மூல நோய், குடலிறக்கம் ஆகிய பல நோய்களுக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்யாவிட்டால் உயிர் வாழவே இயலாது என மருத்துவ உலகம் கூறும். அதற்கு இயற்கையின் பேராற்றல் தெரியாது. பாமர நோயாளிகளை அச்சுறுத்தி, பண விரையம் செய்ய வைத்து நிரந்தரத் தீர்வு இல்லாது செய்து வருகின்றது; ஆனால், இயற்கை உலகம் எந்த வித நோய்க்கும் அறுவைச் சிகிச்சையும் தேவையில்லை. மாற்று உறுப்புப் பொருத்தவும் தேவையில்லை. பண விரையமும் வேண்டாம். எளிதில் விரைவாக நிரந்தரத் தீர்வு காணலாம். ஸ்கேன், எக்ஸ்ரே, மற்றும் எத்தகைய மருத்துவப் பரிசோதனையும் தேவையே இல்லை எனக் கூறி வருகின்றது.
ஆதலால், தைராயிடு நோய் உள்ளவர்கள் எந்த மருத்துவத்தையும் அணுக வேண்டாம். எந்த மருந்தையும் நம்ப வேண்டாம். அறுவைச் சிகிச்சையும் செய்ய வேண்டாம். மீறி எது செய்தாலும் நிரந்தரத் தீர்வு நிச்சயம் காண முடியாது. ஆனால், இயற்கையை முற்றிலும் நம்பி, மனதார அணுகினால், எவ்வித மருத்துவமின்றி, அறுவைச் சிகிச்சையும் இன்றி, பணச் செலவும் இன்றி, எளிதில் நமக்கு நாமே நிரந்தரத் தீர்வு காணலாம். நோய், மருந்து, மருத்துவம், மருத்துவப் பரிசோதனை ஆகிய சொற்களை, செயல்களை மறந்து, நிம்மதியாக ஆனந்த ஆரோக்கிய வாழ்வு வாழலாம்.
தைராயிடு நோயுள்ளவர்கள் மூன்று வேளை சமைத்துண்ணும் பழக்கத்தை படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும். சமைக்காமல் பச்சையாக உண்ணும் பழக்கத்திற்கு மாற வேண்டும். அதாவது இரவு மட்டும் தேவையான தேங்காயை சில்லாகவோ, அல்லது தேவையான தேங்காயை சில்லாகவோ, அல்லது துருவியோ உண்டபின், தேவையான பழ வகைகளை தேவையான அளவு, கிடைக்கும் பழ வகைகளை, ஒன்றன் பின் ஒன்றாக நன்றாக மென்று, ரசித்து, ருசித்து, ஆற அமர உண்ண வேண்டும். மற்ற காலை, மதியம் இருவேளை உணவாக சமைத்த சைவ உணவு, அளவாக, அரை வயிறு உண்ண வேண்டும். பதினைந்து முதல் முப்பது நாட்கள் கழித்து, காலையும், இரவும், சமைத்த உணவுகளைத் தவிர்த்து, குளிர் சாதனப் பெட்டியில் வைக்காத தேங்காயும், பழ வகைகளையும் தேவையான அளவு உணவாக உண்ண வேண்டும். மதியம் ஒரு வேளை மட்டும் சமைத்த சைவ உணவு அளவாக உண்ண வேண்டும்.
அடுத்ததாக தைராயிடு நோய் குணமாகும் வரை, தினம் காலை மாலை இரு வேளைகளாவது எனிமாக் குவளை மூலம், பச்சைத் தண்ணீர் கொண்டு எனிமா எடுத்து வர வேண்டும். மூன்றாவதாக, தினம் இருவேளை (முற்பகல், பிற்பகல்) கழுத்தைச் சுற்றி முப்பது நிமிடங்கள் மெல்லிய ஈரத்துணியைப் போட்டு வரவும். அல்லது பசைபோல் ஒட்டும் செம்மண், களி மண், சட்டிப்பானை செய்யும் மண், வண்டல்கள், குளக்கரம்பை மண், சந்தனம் பூசுவது போல் பூசி நன்கு காய்ந்த பின், தண்ணீர் கொண்டு கழுவி விடலாம். வாரம் ஒரு முறை உடல் முழுவதும் மண் குளியல் போட்டு வரலாம்.
தினம் அர்த்த சிரசாசனம் செய்து வரலாம். எட்டு நடைப் பயிற்சி செய்து வரலாம். கழுத்துப் பயிற்சி செய்து வரலாம். மூச்சுப் பயிற்சி, தியானம் செய்து வரலாம். மனம் சாந்த நிலையில், அமைதி நிலையில் காத்துக் கொள்ளலாம்.
இவ்வாறாக மருத்துவத்தை சாராது, நமக்கு நாமே எளிய இயற்கை வழியைப் பின்பற்றி தைராயிடையும் தவிர்த்துக் கொள்ளலாம். உடல் பருமனையும் குறைத்துக் கொள்ளலாம், உறுதியாக!
பின்குறிப்பு
காபி, டீ, குளிர் பானங்கள், வெந்நீர் போன்ற அனைத்து செயற்கை பானங்களையும் தவிர்த்து, பச்சைத் தண்ணீர், இளநீர், தேங்காய் தண்ணீர், தேன் கலந்த பச்சைத் தண்ணீர், எலுமிச்சை, நெல்லி, திராட்சை, ஆரஞ்சு, மாதுளை மற்றும் இதர பழங்கள் போன்ற பழச்சாறுகள் ஆகிய இயற்கை பானங்கள் அருந்த வேண்டும்;
தினமும் எண்ணெய் கொப்பளித்து வரலாம். உப்பு, வெள்ளைச் சர்க்கரை கலப்பதைத் தவிர்த்து இயற்கை பானங்களை அப்படியே அருந்த வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் மாத்திரை, மருந்துகள் உட்கொள்வதை வாழ்கையில் தவிர்க்கலாம்.
படித்ததை பகிர்ந்தேன்
No comments:
Post a Comment