Thursday, 22 March 2018
பொது செய்தி இந்தியா கேரள மாநில பழமானது பலா
திருவனந்தபுரம் : கேரளா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பழமாக பலாப்பழம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலாப்பழத்தை நாடு முழுவதும் பிரபலப்படுத்தும் முயற்சியில் அம்மாநில அரசு இறங்கி உள்ளது.
சட்டசபையில் உரையாற்றிய கேரளா வேளாண் துறை அமைச்சர் வி.எஸ்.சுனில்குமார், இந்த அறிவிப்பை வெளியிட்டார். பலாப்பழத்தை நாடு முழுவதிலும் மட்டுமின்றி, அதன் தரம் குறித்து உலகம் முழவதிலும் பிரபலப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இதனால் கேரளா மிகுந்த பயனடையும் எனவும் தெரிவித்தார்.
கேரள மாநிலம் ஆண்டுக்கு 30 கோடிக்கும் அதிகமான பலாப்பழங்களை உற்பத்தி செய்து வருகிறது. எவ்வித உரமும் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் இந்த பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. இதனால் கேரள பலா விவசாயிகள் மிகுந்த லாபமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு முன் யானை, கனிக்கோனா மலர், முத்து சிப்பி மீன் ஆகியவற்றையும் கேரளா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பொருட்களாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment