காற்றைச் சுத்தப்படுத்தும்
வீட்டுச் செடிகள்...!
வீட்டுச் செடிகள்...!
வீட்டுக்கு ஒரு செடியாவது வளர்ப்போம்...
மரத்தையெல்லாம் அழிச்சாச்சு. இனி, நல்ல காத்துக்கு எங்கே போறது? இனிமே மரம் நட்டாலும் அது வளர்ந்து முழு மரமாகிறதுக்கு 20, 30 வருஷங்கள் ஆகுமே’ என்று சங்கடப்படுபவர்களே... உங்களுக் காகவே இந்த நல்ல செய்தி!
வீட்டிலேயே வளர்க்கக் கூடிய சில குறுஞ்செடிகளில் காற்றில் உள்ள நச்சுக்களைச் சுத்தப்படுத்தும் குணம் நிரம்பி இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூறுகிறது. தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலையில் வாழும் தன்மையையும், அதிக நன்மை களையும் கொடுக்கும் இந்தச் செடிகளைப் பற்றிய அறிமுகம் இதோ...
கற்றாழை (AloeVera): மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள கற்றாழை, காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைட் என்னும் வேதிப் பொருளை நீக்கும். சருமத் தீப்புண்களுக்கும் மருந்தாகப் பயன்படும்!
சீமை ஆல் (Rubber plant): வெயில் படாத இடங்களில்கூட வாழும் தன்மைகொண்டவை. அதிகமாக அசுத்தக் காற்றை உள்ளிழுத்து அதிகப்படியான ஆக்சிஜனை வெளியிடும்.
வெள்ளால் (Weeping Fig): காற்றின் நச்சுக்களை நீக்கி சுற்றுப்புறத்தின் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும்.
மூங்கில் பனை (Bamboo Palm) : காற்றில் கலந்துள்ள ஃபார்மால்டிஹைட் நச்சுக்களை நீக்குவதோடு இயற்கையான ஈரப்பதனியாகச் செயல்படும்.
ஸ்னேக் பிளான்ட் (snake-plant): நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் ஃபார்மால்டிஹைடைக் கிரகித்து ஆக்சிஜனை வெளிப்படுத்தும். வறண்ட சூழ்நிலை களில்கூட வாழும் தன்மைகொண்டவை.
கோல்டன் போட்டோஸ் (golden pothos): நாசா விஞ்ஞானிகளின் அறிக்கைப்படி காற்றைச் சுத்தப்படுத்தும் தாவரங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருக்கும் இந்தச் செடி, கார்பன் மோனாக்சைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு காற்றின் அளவை அதிகரிக்கச் செய்யும்!
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம். முடியாதபட்சத்தில், இப்படிப்பட்ட செடிகளையேனும்
வளர்ப்போமே..
No comments:
Post a Comment