Sunday, 7 October 2018

நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டிய 30 தகவல்கள்

*நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டிய  30 தகவல்கள் !!!*
************************

நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டிய 30 தகவல்கள்..!!!

*1. இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும்* .

*2. உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துச் சாப்பிட வேண்டும்.*

*3. ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ளவேண்டும்*

*4. உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து சாப்பிடவேண்டும். (நொறுங்கத் தின்றால் நூறு வயது வரை வாழலாம். உமிழ்நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாகப் பணியாற்றக் கூடிய உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும்)*

*5. உண்ணும்போது உதட்டை மூடி வாயில் காற்று புகாமல் மென்று சாப்பிட வேண்டும். வாயைத் திறந்து சாப்பிடுவது உமிழ்நீர் சுரப்பதை தடுத்து செரிமானத்தை பாதிக்கும்.*

*6. சாப்பிடும் போது சாப்பாட்டில் கவனத்தை வைக்க வேண்டும். நம் பார்வையும் கவனமும் வேறு எங்கும் இல்லாமல் உணவை உற்று நோக்கி சாப்பிடவேண்டும்.*

*7. உணவை கையால் எடுத்து சாப்பிடவேண்டும். நம் கை உணவில் படுவது மிகவும் நல்லது.*

*8. சாப்பிடும்முன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும், சாப்பிட்டபின் 30 நிமிடமும் தண்ணீர் குடிக்கக் கூடாது. (தேவைப்பட்டால், தொண்டையை நனைக்கும்படி சிறிது குடிக்கலாம். தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்காக உற்பத்தியாகும் அமிலத்தை நீர்த்து தீங்கை ஏற்படுத்தும்)*

*9. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, புத்தகம் வாசித்துக்கொண்டு, யாருடனாவது பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது*.

*10. சம்மணமிட்டு சாப்பிட வேண்டும் .இது உடலில் பரவும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு உதவும். காலைத்தொங்கவிட்டு நாற்காலியில் அமர்ந்து உண்பது நல்லதல்ல.*

*11. தாய்மார் குழந்தைகளுடன் இருந்தது சாப்பிடக் கூடாது* .

*12. உணவு உண்ணும்போது மன உளைச்சல், சண்டை, கோபம் போன்ற உணர்ச்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.*

*13. கை கால் முகம் கழுவிச் சாப்பிட வேண்டும்* .

*14. குளித்தபின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது . சாப்பிட்டபின் 2.5 மணி நேரம் குளிக்கக் கூடாது*

*15. அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்குச் சாப்பிடுங்கள். ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்தலாம். எப்படி சாப்பிடுவது என்று அறிந்து சாப்பிட்டால் உணவுக் கட்டுப்பாடின்றி எதையும் சாப்பிடலாம*்.

*16. தண்ணீர் சுத்தமாக இருந்தால், தண்ணீரைக் கொதிக்க வைத்தோ, வடிகட்டியோ குடிக்கக் கூடாது. தண்ணீரை மண் பானையில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம*் .

*17. பசி வந்து சாப்பிட வேண்டும், தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், தூக்கம் வந்து தூங்க வேண்டும்.*

*18. காலையில் பல் துலக்குவதை விட இரவில் கட்டாயம் பல் துலக்கி படுக்கைக்கு செல்லவேண்டும்*.

*19. இரவு படுக்கைக்கு நேரத்தில் சென்று விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது.*

*20. தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும்.*

*21. படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும்.*

*22. உணவு, உறக்கம், உழைப்பு, ஓய்வு, உடற்பயிற்சி, உறவு ஆகியவை சரியாக வைத்திருப்பதே உடல்நலத்திற்கு மிக முக்கிய காரணியாகும்.*

*23. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கவும், தண்ணீர் குடித்து நாளை முடிக்கவும்.*

*24. டி,காபி போன்றவற்றை தவிர்த்து /குறைத்து அதற்கு பதில் சத்துமாவு கஞ்சி, சூப் போன்றவைகளை அருந்தலாம்.*

*25. நாற்பது வயதிற்கு மேல் சைவ உணவை உண்டு, அசைவ உணவை குறைத்துக்கொள்வது நல்லது.*

*26. தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணைக் குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது.*

*27. கோபம், எதிர்ப்பார்ப்பு, துக்கம், ஏமாற்றம், தோல்வி, அவமானம் போன்ற உணர்ச்சிகள் உடல் நலத்தை மிகவும் பாதிக்க வல்லது. இவைகளை போக்கும் வழிமுறைகளை அறிந்து, நல்ல நூல்கள் , நண்பர்கள், மருத்துவர்கள் உதவியுடன் உணர்ச்சிகளை குறைத்து அதில் மூழ்கிவிடாமல் வாழ்வது நலம்.*

*29.எதிர்காலத்தை நோக்கி திட்டமிட்டு இறந்தகாலத்தை இழந்து விடாமல், ஒவ்வொருநொடியும் ரசித்து வாழ்தல், சிரித்த முகத்துடன் இருத்தல், நேர்மையான சிந்தனையை கொண்டிருத்தல், உள்ளொன்று வைத்து புறம் பேசாமல் இருத்தல், குழந்தைத் தன்மையை கடைபிடித்தல், இறுக்கமாக இல்லாமல் வெளிப்படையாக இலகுவாக இருத்தல், எண்ணம்-சொல்-செயல்-எழுத்து-வாழ்க்கை ஆகியவற்றில் முரண்பாடு இல்லாமல் இருத்தல் போன்றவை நலம்*.

*30.ஆண்டிற்கு சிலமுறை தினம் செய்யும் வேளைகளில் இருந்து விடுபட்டு பிடித்த இடத்திற்கு, பிடித்த நண்பர்களுடன், குடும்பத்துடன், உறவினர்களுடன் சுற்றுலா செல்லுதல் மன மகிழ்ச்சி தரும் !

#இறைவன்_அருளால்...
வாழ்க வளமுடன் !
வளர்க அருளுடன்

Friday, 21 September 2018

நல்வாழ்வுக்கு மருந்து

பூமியில் மனிதன் தோன்றுவதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு தாவரங்கள் தோன்றிவிட்டன உலகின் மூத்த உயிரினமான தாவரங்களை நம்பி தான் மனிதன் இனம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது உணவு உடை இருப்பிடம் என்று மருத்துவத்துக்கு தாவரங்களை தான் நாட வேண்டி இருக்கின்றது

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் மருந்து என்றால் அது தாவர மூலிகை மட்டுமே அதற்குப் பிறகு தாவரங்களின் நோய்களை குணமாக்கும் மூலப் பொருட்களை பிரித்து அவற்றை ஆராய்ந்து வருகின்றனர் பிறகு அந்த மூலப் பொருள்களை செயற்கையாக தயாரித்து பயன்படுத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். தானாக அனைத்துக்கும் மூலம் மூலிகைகள் தான்.

மனிதன் சமைத்து உண்ண பழகிய பிறகுதான் நோய்களை வர ஆரம்பித்தான் அதனால்தான் கடந்த நூறு ஆண்டுகளில் குழந்தை பிறப்பு கூட மனிதர்களுக்கு மருத்துவமனை சார்ந்த நிகழ்வாக மாறிவிட்டது. மனிதர்கள் தாவரங்களை இனம் காண்பதற்கு முன்பே விலங்குகள் இனங்கண்டு தேவையான முறைகளை பயன்படுத்த ஆரம்பித்து விட்டன.

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது ஒரு தவறான பழமொழி சில சமயங்களில் புல்லைத் தின்று விட்டு வாந்தி எடுப்பது இருப்பதாகவும் அதில் செரிக்காத உணவு பொருட்கள் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள் இதே பழக்கம் நமது வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு  பூனைகளுக்கும் உண்டு.

பூனைக்கு அருகில் குப்பை மேனி செடியின் வேரை கொண்டுபோனால் பூனை குப்பைமேனி வேரை வணங்குவதை இன்று கண்கூடாக பார்க்கலாம் அதனால்தான் குப்பைமேனிக்கு பூனைவணங்கி என்று பெயர் உள்ளது.

அதேபோல் யானைகளுக்குச் செரிமான கோளாறு ஏற்பட்டால் வெள்ளைநிற மண்ணை தேடி உண்பதை பழக்கமாகக் கொண்டுள்ளார் வெள்ளை மண்ணில் அலுமினியம் சிலிகேட் என்னும் பொருட்கள் அதிகமாக இருக்கும் இந்த மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவது தான் அலோபதி மருத்துவத்தில் நெஞ்செரிச்சலுக்கு செரிமானக் கோளாறுகளுக்கு கொடுத்து வருகின்றன

மனித இனத்துக்கு மிகவும் நெருக்கமான குரங்கிடம் மூலிகை பற்றி அறிதல் நிறையவே உள்ளது கருவுற்ற குரங்குகளுக்கு அருகம்புல் நிறைந்த பறித்துக் கொண்டு இருப்பதை நேரில் பார்த்து உள்ளோம் குரங்குகளை ஏதேனும் பூச்சிக்கடியால் பாதிக்கப்பட்டால் சீனி என்னும் மூலிகை இலைகள் உண்கின்றன இந்த மூலிகை காணாக்கடிக்கு என்னவென்று அறியாத விஷக்கடி கைகண்ட மருந்து இப்படி அனைத்து உயிரினங்களுக்கும் மூலிகை மருத்துவம் குறித்து இயற்கைசார் புரிதல் அவர்கள் மூலமாகவே மரபணுக்கள் மூலமாகவே கடத்தப்பட்டு வந்திருக்கிறது.

அதனால் தான் உலகின் தொன்மையான தமிழ் சமூக கடந்து வந்த வரலாற்றுப் பாதை நெடுகிலும் ஆதாரங்களையும் பற்றி அறிவிக்கிறது சங்க இலக்கியத்தில் பெரும்பாலான தாவரங்கள் குறித்து எழுதப்பட்டிருக்கிறது வாழ்வியலின் பல்வேறு கட்டங்களிலும் உறுப்பினர்கள் இசை என அனைத்துக்கும் தாவரங்களின் பெயர்களை தான் பயன்படுத்தி உள்ளனர்

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை நொச்சி கரந்தை வஞ்சி காஞ்சி என அனைத்துமே தாவரங்களின் பெயர்கள் தான் சங்க இலக்கியத்தில் மட்டும் சுமார் 116 தாவரங்கள் பெயர்கள் பேசப்படுகின்றன அவை அனைத்துமே சிறந்த மருத்துவ பண்பு உடைய மூலிகைகள்.

ஒவ்வொரு தாவரமும் ஒரு மருத்துவ பண்புகளை கொண்டிருக்கிறது நம் முன்னோர் இந்த தாவரம் இந்த வியாதிக்கு குணப்படுத்தும் என கண்டுபிடித்து வைத்திருப்பது மிக பிரமிப்பான விஷயம் ஆனால் நாம் அவற்றை தெரிந்து கொள்ள தவறி விட்டோம் என்பது மிக வேதனையாக உள்ளது அதான் உண்மை.

கிராமங்களில் நெல் வயல்களில் மட்டும் கிட்டத்தட்ட 40 மூலிகைகள் தானாகவே உதிர்கின்றன நாம் அவற்றை களைச் செடிகளாக தான் பார்க்கின்றோம் அப்படி நினைப்பவர்கள் கீழாநெல்லி மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் கரிசாலை ஈரலை காக்கும் கொடுப்பை கண்களைக் காக்கும் பொடுகை நீர்முள்ளி நீரைப் பெருக்கும் நாயுருவி பற்கள் இருக்கும் ஆவாரை நீக்கும் கரந்தை கரப்பானை குணமாகும்  சிறுநீர் பெருக்கும் நாயுருவி பற்களில் இருக்கும் ஆவாரை சர்க்கரை நோயை அகற்றும் சீந்தில் நலிந்த உடலின் தோற்றம் இப்படி ஒவ்வொரு மூலிகையின் குணத்தையும் கண்டறிந்து நமது முன்னோர்கள் எவ்வளவு பரிசோதனை செய்து இருப்பார்கள் என்று ஒருபோதும் நாம் எண்ணிப் பார்ப்பதில்லை.

இந்த பரிசோதனைகள் அனைத்துமே நேரடியாக மனிதர்களின் நடத்தப்பட்டவை பரிசோதனையின் முடிவுகளையும் பாடலாக எழுதி இறைவனுக்கு அர்ப்பணிக்கும் பதிவு செய்து வைத்துள்ளனர் முன்னோர் அதோடு பாமர மக்களுக்கு புரியுமாறு பழமொழிகளும் சொலவடைகளும் சொல்லிவைத்துள்ளனர் இப்படி பரம்பரையாக வந்த அறிவு செய்திகள் கடந்த மூன்று தலைமுறைகளில் நடத்தப்பட்டுவிட்டன  அதாவது 1960 ஆம் ஆண்டுக்குப் பிறகு முற்றிலுமாக தடைபட்டுவிட்டது தற்போது கடந்த பத்தாண்டுகளில் மீண்டும் மூலிகை அறிவியல் குறித்து விழிப்புணர்வு மக்களிடையே மிக வேகமாக அதிகரித்து வருகின்றன

காய்ச்சல் சளி போன்ற வியாதிகளுக்கு எல்லாம் ஆண்டிபயாட்டிக் மருந்து ஆரம்பத்தில் நோய் பரப்பும் கிருமிகளை ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிரான தகவமைப்பை பெற ஆரம்பித்து விட்டன அதனால்தான் சிக்கன் குனியா பன்றிக் காய்ச்சல் பறவை காய்ச்சல் டெங்கு காய்ச்சலுக்கு படையெடுத்து வருகின்றனர் இது போன்ற சமயங்களில் கை கொடுக்கும் கை கொடுத்த நில வேம்பு குடிநீர் பப்பாளி இலைச்சாறு போன்றவைதான்.






Wednesday, 19 September 2018

படுக்கையில் இருந்து எழும் பொழுது



படுக்கையில் இருந்து எழும் பொழுது (ஆண்கள் )வலது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்
பெண்கள் இடது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்
விருப்பம் இருந்தால் பூமா தேவியை வணங்கலாம்
காலையில் எழுந்தவுடன் நம்முடைய இரு கைகளையும் உரசி கண்களில்
ஒற்றி கொள்ளவேண்டும் .
கண்களை பற்றி நீங்கள் அறிய படவேண்டிய ரகசியம் .
கண்கள் மனதின் வாசல் ,நம்முடைய எண்ணம் கண்கள் வழியாக வெளிப்படும் ,கண்கள் நெருப்பை தரும் சக்தியுடையவை
இதை தான் எரிச்சல் என்பார்கள் .
கண் திருஷ்டி என்பதும் இதுவே ,திருஷ்டி என்றால் தமிழில் பார்வை என்று பொருள் .
நாம் உறங்கும் பொழுது மனம் ,எண்ணம் அமைதியடையும் இது தான் இயற்கை அப்படி இருக்கும் பொழுது நம்முடைய நெருப்பு சக்தி கண்கள் வழியாக வெளிய செல்லாது .
உறங்கி எழுந்தவுடன் கைகளை உரசும் பொழுது சுடு உண்டாகி கண்களை தொடும்பொழுது அவை கண்களின் நெருப்பை கிரகித்து நமக்குளே வைக்கும்
இந்த கண் நெருப்பு நமக்கு மிகவும் முக்கியம் .
இந்த நெருப்பு செரிமான சக்தியை நமக்கு தரும் .
உணவுகளை பார்த்து கொண்டே சாப்பிடும் பொழுது கண்கள் செரிமானத்தை ஏற்பாடு செய்யும்
அதனால் புத்தகம் படித்து கொண்டு ,மற்ற காட்சிகள் பார்த்து கொண்டு உண்பதால் முறையான செரிமானம் வயிற்றில் நடக்காது .
மேலும் கண் நெருப்பை பற்றி மகாபாரத்தில் ஒரு நிகழ்ச்சி ..
துரியோதனன் போருக்கு போகும் முன் தன தாயிடம் ஆசி பெற செல்கிறான்
எப்பொழுதும் கண்களை கட்டி இருக்கும் அவள் துரியோதனிடம் ,நீ காலையில் குளித்தவுடன் நிர்வாணமாக என்னை பார்க்க வா என்று சொல்கிறாள் .
அதன் படி அவன் வந்தவுடன் தாய் தன் கண் கட்டுகளை களைந்து அவனை பார்க்கிறாள் .
பிறகு போருக்கு செல்கிறான் துரியோதனன் ,பீமனிடம் சண்டை செய்யும் பொழுது பீமன் அடி துரியோதனின் மேல் விழும் பொழுது (டங்) ஒரு
பித்தளை குடத்தை அடித்தது போல் ஒரு சத்தம் வருகிறது .
குழப்பம் அடைந்த பீமன் கிருஷ்ணரிடம் எப்படி இவன் உடம்பில் இருந்து
இப்படி சத்தம் வருகிறது என்று கேள்வி கேட்கிறான் .
கிருஷ்ணர் சொல்கிறார் பல வருடம் கண்களை கட்டிஇருந்த அவனுடைய தாய் கண்களை களைந்து அவனை பார்த்தது இருக்கிறாள் .
அவளுடைய கண்களில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு கவசமாக அவனை காவல் காக்கிறது என்றார் .
இதை சித்தர்கள் மாற்றாக நமக்கு சொல்லியது
உணவை உண்ணும் முன் கண்களில் ஒற்றி உண்ணவேண்டும் அல்லது
பார்த்து உண்ணவேண்டும் .
கோவில்களில் தரப்படும் பிரசாதம் நாம் கண்களில் ஒற்றிக்கொள்ள சொல்லபட்டது இதற்க்கு தான் .
வீட்டில் சாதத்தை பார்த்து சாப்பிடவேண்டும் என்பதும் இதற்க்கு தான் .
அடுத்து
மல ஜலம் கழித்து முடித்தவுடன் உடனே குளித்து விடவேண்டும் .
நான் காலையில் சிறிது தூரம் நடை பயிற்சி செய்யும் பொழுது நிறைய நபர்களை சந்திக்கிறேன் .
அவர்கள் சொல்கிறார்கள் மருத்துவர் சொல்படி நடை பயிற்சி செய்கிறேன் ..
என்னை பொறுத்தவரையில்
அசைவ உணவுகளை உண்பதும் ,மேலும் சரியான உணவு முறை
பழக்கம் இல்லாத காரணமும் தான் ...
காலை எழுந்தவுடன் குளிப்பதினால் உடலில் உள்ள சூடு சமப்படுகிறது .வயிற்றில் உள்ள வெப்பம் செரிமானத்தை தயார் செய்து விடுகிறது பசி எடுக்க வைக்கிறது .
பசிக்காமல் உண்பது ,நேரம் தவறி உண்பது ,அடிக்கடி இறைச்சி உணவு உண்பது ,துரித உணவுகளை உண்பது இவைகள் நமக்கு நோய்களை உண்டாகிறது
சித்தர்கள் சொல்வது எழுந்தவுடன் கடமைகளை செய்தவுடன் குளியல் .
குளிக்கும் பொழுது நாமங்கள் சொல்லுங்கள் பலிக்கும் .
ஆற்றில் நின்று மந்திரம் சொல்லும்பொழுது (தொப்புள் கொடி முழ்கும் படி நின்று ) பலிதம் ஆகும் என்று ரிஷிகளும் ,சித்தர்களும் சொல்லுவார்கள் ,
இன்று ஆறுகளை தேடி நாம் செல்ல நேரம் இல்லை .
சித்தர்கள் எழுதிய வைத்திய நூல்களில் உணவு முறைகளையும்
மனிதன் உணவுகளை உண்ணும் முறைகளையும் வகுத்து பிரித்து அழகாக நெரிபடுத்தி இதன் படி நோய்களை மற்றும் மனதின் என்ன அலைகளை சரி செய்ய முடியும் என்று ஆராய்ந்து நமக்கு தந்து உள்ளார்கள் .
அதன் படி உணவு முறைகளான இவைகள் ..
நக்கி சாப்பிடுவது ,
சப்பி சாப்பிடுவது
கடித்து சாப்பிடுவது
உறிந்து சாப்பிடுவது
என்று 4 வகையாக பிரிக்கலாம் .
எந்த உணவை எப்படி சாபிடலாம் என்று முறை இருக்கிறது .
சித்தர்கள் சொல்வது
உணவுகளை எடுத்து கொள்ளும் முன் கை கால்கள் குளிர்ந்த நீரில் கழுவி முகத்தில் நாமம் இட்டு பிறகு கால்களை மடக்கி தரையில்
அமர வேண்டும் .பிறகு வலது கையில் நீர் ஊற்றி உறிந்து குடிக்க வேண்டும் இதை 3 முறை செய்ய வேண்டும் இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு பிடித்த இறைவன் பெயர் சொல்லுங்கள் .
கால்களை மடக்கி அமர்ந்தால் கல்லீரல்,மற்றும் செரிமான சுரப்பிகள் வேலை செய்யும்
சக்கரை நோய் வராது,
உள்ளங்கையில் நீர் உற்றி உறிந்தால் பல அற்புதம்கள் நம் உடம்பின் உள்ளே நடப்பதை உணரமுடியும்.
கைகளை பற்றி சில விவரம்கள் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் .
தாயின் வயிற்றில் உள்ள சிசு பிறந்தவுடன் முதன் முதலாக சப்பிசாபிடும் பால் வயிற்றில் பட்டவுடன் வயிறு தன்னுடைய செயலை தொடங்கிறது என்பதனை நாம் அறிவோம் .
பிறந்த குழந்தை கைகளை மூடிய படி இருக்கும் .இப்படி கைகளை வைத்து இருக்கும் பொழுது தான் ரேகைகள் உண்டாகிறது என்று கைரேகை சாஸ்திரம் சொல்கிறது .மேலும் வயிற்றின் உள் அமைப்பு தான் உள்ளங்கை
என்று சொல்கிறது .
இதை அகஸ்தியர் நாடியில் உரைக்கும் பொழுது
எந்த மருந்து எடுத்தாலும் உள்ளங்கையில் நீர் உற்றி சிவ சிவ என்று சொல்லி குடித்து விட்டு கிழக்கு முகம் நின்று மருந்து சாப்பிடவும்
என்று சொல்கிறார் .
மேலும் வயிறு நோய்களை தீர்க்கும் போகர் ,கோரக்கர் உள்ளங்கைகளில்
தான் தேன் உற்றி அதில் மருந்துகளை குழைத்து உன்ன சொல்லி உள்ளார்கள்
நம்முடைய உள் வயிற்றின் அமைப்பு தான் உள்ளங்கைகள் .கைகளை வைத்து
நோய்களை அறியலாம் .
நகம் ,விரலில் உள்ள மச்சம் ,அதில் உள்ள இடைவெளி போன்ற அடையளாம்கள் வைத்து நோய்களை அறியலாம் ..
மேலும் நம் உடம்பில் உள்ள காந்த அலைகளை வைத்து கைகளின் முலம்
அடுத்தவர் உடம்பில் உள்ள நோய்களை ,கர்ம வினைகளை அகற்றலாம் இதுவே தீக்ஷை ,
இதை மகான்கள் ,சித்தர்கள் ,தூதுவர்கள் செய்தார்கள் ....
கைகளில் நீர் உற்றி உறிஞ்சுவதால் ஏற்படும் பலன் ....
நம் உடலில் தொண்டை தான் சகல நோய்களின் தடுப்பு சுவர் என்று சொல்லலாம் .
இதை மீறி எந்த கிருமியும் செல்ல முடியாது .நம்முடைய
உடல் சூடுகளில் தொண்டையில் உள்ள சுடு மிக மிக முக்கியமானது என்று சித்த வைத்திய நூல் சொல்கிறது
இந்த சுடு( ஜடாரக்னி ) தான் நமக்கு சம விகிதமாக செயல்படும் .இதற்க்கு ஈரம் தேவை .
(குளிர்ச்சி தேவை )
இதை சித்தர்கள் தலை கீழாக தொங்கும் லிங்கம் உடைய இடம் என்று சொல்வார்கள்
ஆம் லிங்கம் தலைகீழாக இருக்கும் (உள்நாக்கு ) நீலகண்டன் என்பது இவைகளை குறிப்பது இது தான் செயல்களில் தவறினால் சுடு அதிகமாகும் (காய்ச்சல் ) நாம் உணவு உண்ணும் பொழுது இடை இடைய நீர் அருந்தகூடாது.
தாகத்தை ஏற்படுத்தும் லிங்கம் ஈரமாக வைக்க உள்ளங்கையில் நீர் வைத்து உறிந்து குடிக்கும் பொழுது தொண்டை நணையும் பிறகு உண்பதால் நீர் வறட்சி வராது.
சாப்பிட்டு முடியும் வரை தாகம் இருக்காது .
உணவு அருந்திய அரைமணி நேரம் பிறகு தான் நீர் அருந்த வேண்டும் அகவே கால்களை மடக்கி கைகளில் நீர் உற்றி எதாவுது இறைவன் நாமம்
சொல்லி உறிந்து குடித்து விட்டு உணவு சாப்பிட வேண்டும்.

Sunday, 16 September 2018

teak sapling in my farm after 20days













மூலநோய்க்கு நிவாரணம் தரும் குப்பைமேனி (hemorrhoids)

மூலநோய்க்கு நிவாரணம் தரும் குப்பைமேனி....hemorrhoids
குப்பைமேனி நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலைக் கட்டுப்படுத்தும். விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய், நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. இலை வாந்தி உண்டாக்கிக் கோழையகற்றியாகவும். வேர் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.
இதன் சமூல சூரணம் 1 சிட்டிகை நெய்யில் காலை மாலை ஒரு மண்டலம் கொடுக்க 8 வித பவுத்திர நோயும் தீரும். வேர்சூரணம் 1 லிட்டர் நீரில் 1 பிடி போட்டு 8 இல் ஒன்றாய் காய்ச்சிக் கொடுக்க நாடா புழு, நாக்குப்பூச்சி நீங்கும். பேதியாகும் சிறுவர்களுக்குப் பாதியளவு கொடுக்கவும்.
மூலநோய் ஒரு சிக்கலான நோய். அறுவை செய்தாலும் வளரும். மூலத்திற்குக் குப்பைமேனி சிறந்த மருந்தாகும். பூத்த குப்பைமேனியை வேறுடன் பிடுங்கி நிழலில் உணர்த்தி சூரணம் செய்து இதில் 2-5 கிராம் அளவு பசும் நெய்யில் காலை மாலை சாப்பிடுக, 48 நாள் சாப்பிட எந்தவகை மூலமும் முற்றிலும் குணமாகும் மோரில் சாப்பிட வேண்டும். புளி, காரம் உணவில் சேர்த்து கொள்ளாவிட்டால் விரைந்து குணமடையும்.
குடற்பழுவான நாடாப்புழு, கீரிப்பூச்சி, ஆகிய வற்றிக்கு, இதன் வேர் 50 கிராம்200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள் அனைத்தும் வெளியேறும்.
குப்பைமேனிச் சாற்றில் சுண்ணாம்பு கலந்து, நாய், பாம்பு, எலி, முதலியன வற்றில் கடிவாயில் தடவ குணமடையும். மேகப்புண்ணும் குணமடையும்.
ஆமணக் கெண்ணையில் இந்த இலையை வதக்கி இழஞ் சூட்டுடன் வைத்துக் கட்ட படுக்கைப் புண், மூட்டு வீக்கம், வாத வலி தீரும்.
குப்பைமேனி இலையின் பொடியை மூக்கில் பொடிபோல் இழுக்க நீர் வடிந்து தலைவலி உடனே குணமடையும். இதனை நசியமிடுதல் என்பர்.
குப்பைமேனி, மஞ்சள், உப்பு மூன்றும் அரைத்துப் பூசி ஒரு மணி நேரம் சென்று குளித்துவர சொறி, சிரங்கு, படை குணமடையும்.
எல்லா வகையான புண்களுக்கும் இதன்இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூச குணமடையும், மேனி மீண்டும் எழிலோடு விளங்கும்.

குப்பைமேனி